அரசியல் நெருக்கடியால் பதவி விலகினார் மகிந்த ராஜபக்சே

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, புதிய பிரதமராக அதிபர் சிறிசேனா நியமித்தார். ஆனால் மூன்று முறை முயற்சித்தும் நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட்டும், அதனை நிரூபிக்க ராஜபக்சே தவறிவிட்டார். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுடன் ரணில் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version