மகாத்மா காந்தியின் 71வது நினைவுதினம் இன்று கடைபிடிப்பு

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்து, நாட்டின் தேசத்தந்தையாக போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. டெல்லி பிர்லா பவனில் கடந்த 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இடம் பிறகு காந்தி ஸ்மிருதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில், காந்தியின் 71வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

காந்தியின் நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சர்வமத பிரார்த்தனை நிகழ்வில் தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.காந்தியடிகளின் நினைவு தினமான இன்று தியாகிகள் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தநிலையில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்திக்கு மதுபான கடைகளை மூடிவந்த நிலையில், தற்போது அவரது நினைவு தினத்திற்கும் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version