மகாத்மா காந்தி சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

சென்னை இந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 புள்ளி 2 அடி உயர மகாத்மா காந்தி சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயனமாக இன்று சென்னை வந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவுக்கு சென்றார். இந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதன் வளாகத்தில் 15 புள்ளி 2 அடி உயரத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவில் தமிழில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் நீதியரசர் சிவராஜ்.வி.பாட்டீல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version