வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ஆயிரத்தி 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையில் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ. பன்னீர்செல்வம், சென்னை நகரை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை பாதுகாக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை தொடர மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்காக ஆயிரத்து 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ஆயிரத்து 31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.