தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரா..

தொடர் மழையால் மகாராஷ்டிரா மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல மாவட்டங்களில் அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மற்றும் சாங்கலி மாவட்டங்களில் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், ஒடிஷா மாநிலம் மால்காங்கிரி மற்றும் கலஹந்தி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தின் மறுமுறையில் சிக்கிக் கொண்டவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 

Exit mobile version