மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
மகாராஷ்டிரம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரத்தின் உச்சானி அணை நிரம்பியதால் பீமா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தின் குல்பர்க்கா மாவட்டத்தில் உள்ள கட்டேர்க்கா என்னுமிடத்தில் பீமா ஆற்றில் நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் பாய்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பாலத்தையும் அணையையும் மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.