மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனாவிற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க மறுத்துவிட்டதையடுத்து, சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டி வரும் நிலையில், ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம், சிவசேனா கோரிக்கை விடுத்தது. இதை நிராகரித்த ஆளுநர், ஆட்சி அமைக்க தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. இன்று காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.
Discussion about this post