குமரியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்  108 கிலோமீட்டம் பயணம் செய்து 12 சிவாலயங்களை தரிசிக்கும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் இன்று துவங்கியது.   

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியில் அமைந்துள்ள  திருமலை மஹாதேவர் ஆலயத்தில்  இருந்து 108 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 12 சிவாலயங்களை தரிசிக்கும் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் துவங்கியது.

இதில் ஒவ்வொருவருடமும்  தமிழகம்  மற்றும் கேரளாவில் இருந்து சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள்  கலந்துகொண்டு கால் நடையாகவும், இருசக்கர வாகனங்களிலும் பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இவ்வருடம் நடைபெறும் சிவாலய ஓட்டம் இன்று துவங்கிய நிலையில், இதுவரை பத்தாயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த யாத்திரை நாளை நள்ளிரவு வரை நடக்கவுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்காக நான்கு டிஎஸ்பி-கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version