மகா சிவராத்திரியையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நடத்தப்பட்ட நான்கு கால சிறப்பு அபிஷேகங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற பழமையான தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகுசிறப்புடன் துவங்கப்பட்டு, அதில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். மேலும் மகா சிவராத்திரியையொட்டி, பெருவுடையாருக்கு விபூதி, திரவியங்கள், மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.