அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா

பிரசித்தி பெற்ற எளம்பலூர் பிரம்ம ரிஷி மலை அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் அமைந்துள்ளது அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோவில். இந்த மலையில் 210 சித்தர்கள் அருள் புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் “மஹா சிவராத்திரி விழாவையொட்டி 108 சங்குகள் சிவ வடிவில் வடிவமைக்கப்பட்டு ” யாக வேள்வியில் 96 வகை மூலிகைப் பொருட்கள் இடப்பட்டன. தொடர்ந்து ஈஸ்வரருக்கு தீபாரதனை பால், தயிர், மஞ்சள், அரிசி மாவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சிவராத்திரி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் “சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version