சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகர ஜோதி பெருவிழா இன்று நடைபெற உள்ளது. அதைக் காண்பதற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கி உள்ளனர்.  

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி பெருவிழா கொண்டாடப்படுகிறது. மண்டல பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், இன்று மகரஜோதி பெருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மகரஜோதி பெருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக, பந்தளம் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் கொண்டுவரப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை வந்து சேரும் ஆபரணங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்பிறகு, பதினெட்டாம் படி வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதையடுத்து மாலை 6 மணி முதல் 7 மணி வரை மகரஜோதி பெருவிழா நடைபெறும். ஐயப்பனின் மகரஜோதியை நேரில் காண்பதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கி உள்ளனர்.

Exit mobile version