முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து மதுராந்தகம் ஏரியில் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து, 20 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மதுராந்தகம் ஏரிக்கு, வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கல்லாற்றின் வழியாக இரண்டாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையின் இருபுறமும் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.