ஜப்பான் துறைமுக கப்பலில் இருந்து தங்களை மீட்குமாறு மதுரை வாலிபர் கோரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமன்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்து தங்களை விரைவில் மீட்கக்கோரி, வாட்ஸ்ஆப் மூலம் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த வடிவேல் நகரை சேர்தவர் அன்பழகன். இவர் டைமன்ட் பிரின்ஸ் கப்பலில் பணிபுரிகிறார். இக்கப்பல் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் ஒக்கமா ஹாட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து அன்பழகன் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியில், கப்பலில் வைரஸ் தொற்று காரணமாக 70, 80 பேருக்கு மேல் உடல் நலக் குறைவாக இருக்கிறார்கள் என்றும், ஆனால் இந்தியர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடிவடிக்கை எடுத்து, தங்களை மீட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version