மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது.
மதுரை வைகை ஆற்றின் நடுவே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டமைய மண்டபம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இந்த மண்டபத்தில் 36 தூண்கள் இருந்த நிலையில் தற்போது 24 தூண்கள் மட்டுமே உள்ளன. மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த மண்டபத்தை மறுசீரமைக்க 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, சுமார் 43 லட்ச ரூபாய் ஒதுக்கி சீரமைப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.