திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை திரில் வெற்றி

நத்தத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியும் – மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. முதலில் ஆடிய திருச்சி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மதுரை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுக்க போட்டி சமனில் முடிந்தது. இதன் காரணமாக இரு அணிகளும் சூப்பர் ஓவரை விளையாடின. முதலில் ஆடிய மதுரை அணி, 13 ரன்களை திருச்சி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, ஆடிய திருச்சி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து, மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

Exit mobile version