மதுரை மத்திய சிறையில், சிறைவாசிகள் கஞ்சா பயன்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.
ரகசிய தகவலை அடுத்து, சிறைச்சாலையில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனை நடத்தினர். கைதிகளின் அறைகள், சிறை வளாகங்கள் உணவு தயாரிக்கும் பகுதிகளில் அவர்கள் தீவிர சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிறைக்குள் கைப்பற்றபடவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.