மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை-2.5 லட்சம் ,வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பரிசுப் பொருட்களை லஞ்சமாக வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் காசுகள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version