மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பது இறைவனே என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வரும் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற விழாவில், சுவாமி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கோயிலில் இருந்து தேர் புறப்பட்டு, வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி உட்பட மதுரை நகரின் முக்கிய வீதிகளின் வழியே உலா வந்தது. சுவாமி சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் எழுந்தளிருய சப்பரங்களை பெண் பக்தர்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.