மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வையடுத்து இல்லங்களில் பெண்கள் மங்கலநாண் மாற்றிகொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக, கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது.
சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் படிக்க, மீனாட்சி திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் வீட்டிலிருந்தே திருக்கல்யாணத்தைக் காணும் வகையில், யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது
கரோனா பரவல் காரணமாக, வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின்றி மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது