மத்திய அரசின் தூய்மை விருதை பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

இந்தியாவிலுள்ள தூய்மையான புனிதத்தலங்களின் வரிசையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, தூய்மை கோயில்களுக்கான மத்திய அரசு விருதை வென்றுள்ளது. ஆண்டு முழுவதும் கோயிலில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தொடர் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கோயில் இணை ஆணையர் நடராஜன் கருத்து:

கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகள் மற்றும் அருகிலுள்ள இடங்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது. கோயிலுக்கு உள்ளே கோயில் நிர்வாக ஊழியர்கள் பராமரிக்கின்றனர். பக்தர்களின் கோரிக்கை மற்றும் சில காரணங்களின் அடிப்படையில் செல்போன் பாதுகாப்புக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளோம். கோயிலைத் தூய்மையாக வைத்திருப்பதற்காக மத்திய அரசு விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

மாநகராட்சி ஆணையர் விசாகன் கருத்து:

மாநகராட்சி நிதி மட்டுமின்றி, பாரத் பெட்ரோலியம் வழங்கிய நிதியையும் கொண்டு கோயில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டுவருகிறோம். மேலும், அடுத்த ஆண்டுக்குத் திட்டமிட்டுள்ள நீர்வள மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் பாரத் பெட்ரோலியத்திடம் நிதி கேட்டுள்ளோம். மேலும், நிலத்தடிக் குழாய் மாற்றுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சித்திரை வீதிகளில் நடைபெற்று வருகின்றன. தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடர்வோம் என்று கூறினார்.

Exit mobile version