சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் பகுதிகளில் செயல்பட்டு வந்த அன்னதான மடங்களை மீண்டும் திறக்கவும், மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறைகளை சுத்தம் செய்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் மடத்தினர், தனியார் அமைப்புகள் ஆகியோர், சதுரகிரி மலைப்பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கக் கூடாது என்றும், சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தணிப்பாறை பகுதியில், வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே உள்ள பகுதிகளில்தான் அன்னதானம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவு, இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மட்டுமே பொருந்தும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Exit mobile version