அரசு மருத்துவமனையில் தாய்மார்கள் அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தம்

மதுரை அரசு மருத்துவமனையில், தாய்மார்களின் அனுமதி பெறாமலேயே, கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக எழுந்துள்ள புகார், சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

மதுரையில் செயல்பட்டுவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 100-க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, அவர்களது அனுமதி இன்றியே கருத்தடை சாதனமான காப்பர் டி பொருத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால், பல உடல் உபாதைகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள தாய்மார்கள், தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வசதி இல்லாததாலேயே அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், அங்கும் அனுமதி இன்றி தங்களுக்கு இதுபோன்ற செயல்கள் நடப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

 

Exit mobile version