வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய மதுரை மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ஆட்சியர் நாகராஜன் வருகை தந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Exit mobile version