அரசுப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் கற்றல், எழுதுதல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி என்றும், வகுப்பறையில் பாடம் எடுப்பது என்பது ஒரு கலை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுப்பை உணார்ந்து மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.