மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்சி பெல் நிறுவனத்தில், தடைபட்டுள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும், அதேபோல் செங்கல்பட்டு HLL பயோடெக் நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும், உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சூழலில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன் என கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு சொந்தமாக எத்தனை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன?, அதன் தற்போதைய நிலை என்ன என்று நீதிபதிகள் வினவினர். தடுப்பூசிக்காக தனியார் நிறுவனங்களுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்யும் சூழலில், அரசே தடுப்பூசிகள் தயாரிப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து வரும் 19ஆம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள்