மதுரை அழகர் மலை தமிழக வனத்துறைக்கே சொந்தமானது: உச்சநீதிமன்றம்

மதுரை அழகர் மலை, தமிழக வனத்துறைக்கு சொந்தமானதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை அழகர் மலை, கள்ளழகர் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, பல ஆண்டுகளாக விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி அழகர் மலையை கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமென அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அழகர் மலையின் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கோவில் நிர்வாகத்திற்கு வழங்க முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வனப்பகுதியில் எந்தவிதமான சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும், மரங்களை அகற்றுதல் போன்ற எந்த ஒரு பணிகளிலும் ஈடுபட கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

Exit mobile version