திருக்கார்த்திகையை முன்னிட்டு கோம்பை மலை பகுதியில் ஏற்றப்பட்ட மகாதீபம்

மதுரை மாவட்டம் அழகர் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 3 ஆயிரம் அடி உயர கொம்பை மலைப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோவில் வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. பொதுவாக வைணவத் தலங்களில் கார்த்திகைத் திருநாளுக்கு முதல்நாளே கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, திருக்கார்த்திகையை முன்னிட்டு அழகர்மலையில் உள்ள கோம்பை மலைப்பகுதியில், ஐந்தடி உயர இரும்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரம் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் பெருமாள் கோவிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து தேன், நெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட தினைமாவு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் மலை அடிவாரத்தில் இருந்தவாறு பக்தர்கள் வழிபட்டனர்.

Exit mobile version