டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். காசநோயை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் வெகுவாக பாராட்டினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய இருப்பதாக கூறிய அவர், சுகாதாரத்துறைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.