மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது

வருடம் முழுவதும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விழாக்கள் நடைபெற்று வந்தாலும், சித்திரை திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் மீனாட்சியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version