அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் அரசியல் கட்சிகள்,தன்னார்வ அமைப்புகள் அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, அரசின் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் அதற்கான காரணம் குறித்து, தமிழக அரசு சார்பில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க விரும்பும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்க, 48 மணி நேரத்துக்கு முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், நிவாரண உதவியை வழங்க 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

Exit mobile version