நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரைத் திருவிழா. இரண்டாம் நாளான இன்றைக்கு பூத-அன்னவாகன உலா நடைபெறுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாய காலை 7 மணியளவில் நான்கு மாசிவீதிகளில் தங்கச்சப்பர வாகன உலாவானது நடைபெற்றது. இன்று இரவு 7 மணியளவில் அதே நான்கு மாசி வீதிகளில் பூதம் – அன்னம் வாகன உலாவானது நடைபெற இருக்கிறது.
பூத வாகனம்
மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் நானவர்க்கும்
பெருமாள் கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே.
– சுந்தர் தேவாராம்.
அன்னவாகனம்
மறிமலி புரிசை மாடக்கூடர்
பதியிசை நிலவு பால் நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆலவாயின்
மன்னியன் சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பார்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
– இறையனார் திருமுகப்பாசுரம்.
இரனா நாள் திருவிழா, துலாம், சூக்குமம் என்னும் இருவகை யாக்கையையும் நீக்கிக் கொள்ளும் பயனைக் குறிப்பதாகும். இரண்டாம் நால் இரவு, சிவபெருமான் வீற்றிருப்பாதாக விளங்கும் பூதவாகனம் விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர். பூதகணங்களின் தலைவராக விளங்குகின்ற சிவபெருமாண், உயிர்க்கும் பொருட்டு இவ்வருட்கோலத்தில் எழுந்தருளுகின்றார்.
Discussion about this post