திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான மாதவரம் தொகுதி, 2009 ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் போது, வில்லிவாக்கம் தொகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது. புழல், நாராவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மாதவரம் பால் பண்ணை, புழல் ஏரி, சோழவரம் ஏரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புழல் மத்திய சிறைச்சாலை உள்ளிட்டவைகளையும் இந்த தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.
மாதவரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 717 என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 323 பேரும், பெண்கள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 288 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 106 பேரும் உள்ளனர்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மூர்த்தி, ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 468 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, 80 ஆயிரத்து 703 வாக்குகள் பெற்று, 34 ஆயிரத்து 765 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதனையடுத்து நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், 1 லட்சத்து 22 ஆயிரத்து 82 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தட்சிணாமூர்த்தி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 829 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.
இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் எஸ்.சுதர்சனம் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரமேஷ் கொண்டலசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஏழுமலை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? – அமைச்சர் தங்கமணி கேள்வி…
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடி முதல், வாக்கு சேகரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி. அந்த பரபரப்புக்கு இடையே அவர், நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சியின், உங்கள் தொகுதி உங்கள் வேட்பாளர் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, மாதவரம் தொகுதிக்காக செய்த அனைத்து திட்டங்களையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்ததாக குறிப்பிட்டார்.
2016 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ சுதர்சனம் எந்த அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை என, தொகுதி மக்கள் குறை கூறுவதாகவும், இந்த முறை தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளதாகவும் மாதவரம் மூர்த்தி தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…
அதேபோல், வரும் தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக செய்துகொடுத்து, மீண்டும் வளர்ச்சியான பகுதியாக மாதவரத்தை மாற்றிக் காட்டுவேன் எனவும் அவர் சபதமேற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால், வெற்றிப் பாதையில் பயணித்து வரும் தமிழகத்தில், இதே நிலையே தொடர வேண்டும் என, மாதவரம் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், அவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல், அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்திக்கு தான் கிடைக்கும் என்பதை கண்கூடாக அறிய முடிகிறது. மாதவரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், மீண்டும் விஸ்வரூப வளர்ச்சியடைய, மக்கள் தெரிவித்து வரும் ஆதரவு, அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.