`நான் என்ன பிரதமரா?’ – பப்ஜி மதனின் அடங்காத திமிர்

தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை, போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.

தருமபுரியில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் பப்ஜி மதனை, சேலத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சோதனை நடத்தினர். பின்னர், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பப்ஜி மதன் அழைத்து வரப்பட்டார். அப்போது, ஊடகத்தினர் வீடியோ எடுத்ததை பார்த்த மதன், “நான் என்ன பிரதமரா?” என கேட்டார்.

அதற்கு மதனை அழைத்து சென்ற காவல் ஆய்வாளர், “நீ குற்றவாளி வா” என கூறி அழைத்து சென்றார். மதனிடம் ஆபாச பேச்சு வீடியோ குறித்தும், வீடியோவில் பேசக்கூடிய பெண்கள் குறித்தும் விசாரிக்க உள்ளனர். பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விடிய விடிய மதனிடம் விசாரணை நடத்தி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version