மாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு – ஜனவரி 7 க்கு மீண்டும் ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்களின் சட்டவிரோத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டு வரைவு ஆவணங்களை தாக்கல் செய்ய சி.பி.ஐ க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பி.எஸ்.என்.எல். இணைப்புகள் பெற்ற வழக்கில் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ போலீசார் மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மாறன் சகோதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பிறகு தங்கள் தரப்பில் வாதங்களை முன் வைப்பதாக தெரிவித்தனர். மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டு ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்ட நிலையில், வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Exit mobile version