உத்திரபிரதேசத்தில் சொகுசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.
உத்திரப்பிரதேசத்திலிருந்து ஜெய்பூர் நோக்கி படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று பயணித்து கொண்டிருந்தது. 50 பயணிகளுடன் கனூஜ் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயங்களுடன் மீட்க்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 20 பேரை மீட்க முடியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.