எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும்

திட்டமிட்டபடி எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காலை 6 மணி முதல் துவங்கியது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் சேமிப்பு கிடங்கில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர்களில் அடைக்கும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செல்லும் பணியை எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு எண்ணெய் நிறுவனங்கள் 5 ஆயிரத்து 500 டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் 4 ஆயிரத்து 800 வாகனங்களுக்கு மட்டுமே பணி ஒப்பந்தம் வழங்கியது. மீதமுள்ள 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் பணி ஒப்பந்தம் வழங்க கோரி ஜூலை 1-ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என ஏற்கனவே அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தநிலையில், திட்டமிட்ட படி காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது.கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version