நூதன முறையில் செல்போன் திருட்டு

முன் பின் தெரியாத நபரிடம் இருந்து, இருபது ஆயிரம் ருபாய் கொடுத்து போனை வாங்கிய நபர் ஒருவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள money exchange அலுவலகத்தில் தினேஷ் குமார் என்பவர் வெளிநாட்டு பணத்தை மாற்றுவதற்காக காத்திருந்தார். அப்போது அந்த இடத்தில் நின்றிருந்த தினேஷ் குமாருக்கு முன் பின் அறிமுகம் இல்லாத நபர் அவரிடம் வந்து நான் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது ஒரு ஐபோனை குறைந்த விலைக்கு வாங்கிவந்தேன். உங்களுக்கு வெறும் 20,000 ரூபாய்க்கு தருகிறேன் என்று கூறினார். 3 மடங்கு விலை குறைவாக கிடைக்கிறதே என்று நினைத்து தினேஷ்குமாரும் வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இருப்பினும் அந்த முன்பின் அடையாளம் தெரியாத நபர் தினேஷ் குமாரிடம் போன் சீல் பண்ணப்பட்டதால் நீங்கள் திறந்து பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். வாங்கிய பொருளை பார்க்காமல் தினேஷ்குமாரும் அதை எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதன் உள்ள வெறும் கண்ணாடி துண்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். முன் பின் தெரியாத நபரும் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்த தினேஷ்குமாருக்கு உடனே நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பண பரிமாற்றம் செய்யும் அலுவலகத்தில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை தேடி வருகின்றனர். முன்பின் அடையாளம் தெரியாத நபரிடம் எந்த முறையான விசாரணையும் இல்லாமல் வாங்கிய பொருளை பற்றி எதுவுமே தெரியாமல், பணம் கொடுப்பது என்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் காவல்துறையினர்.

Exit mobile version