சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 26 ஆயிரத்து 528 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 22 கேரட் தங்கம் நேற்றைய விலையில் இருந்து 13 ரூபாய் குறைந்து இன்று கிராம் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 303 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 473 இல் இருந்து 13 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 460 ரூபாயாகவும், ஒரு சவரன் 27ஆயிரத்து ,784 ரூபாயில் இருந்து 104 ரூபாய் குறைந்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து கிலோ 41 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Exit mobile version