சென்னையில் ஆபரணத்தங்கத்தின் சவரனுக்கு விலை 328 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று விலை சற்று சரிவை சந்தித்துள்ளதுள்ளது. சென்னையில் 24 காரட் தங்கம் கிராமுக்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 898 ரூபாயிலிருந்து 41 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 857 ரூபாய்க்கும், சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 741 ரூபாயிலிருந்து 41 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையிலிருந்து கிராமிற்கு 2 ரூபாய் 30 காசுகள் குறைந்து 54 ரூபாய் 80 காசுகளிலிருந்து 52 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரத்து 300 குறைந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.