லாட்டரி அதிபர் மார்ட்டினின் காசாளர் பழனிச்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது

லாட்டரி அதிபர் மார்ட்டினின் காசாளர் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

லட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிசாமி மேட்டுப்பாளையம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே லாட்டரி அதிபர் மார்ட்டினின் அலுவலகங்கள் மற்றும் அவரது காசாளரான பழனிசாமி வீட்டிலும் சோதனை நடைபெற்ற நிலையில் பழனிசாமி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகன் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அவரது மரணத்தை சந்தேக மரண வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது மகன் ரோகின்குமார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் தரப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். இதனையடுத்து பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Exit mobile version