சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில் கடந்த 8 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்களிடம் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் நீடிக்கிறது. சத்திரபட்டி பகுதியில் 50 சதவீத கூலி உயர்வு மற்றும் பண்டிகை கால விடுப்பு சம்பளம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விசைத்தறி உரிமையாளர்கள் ,தொழிலாளர்கள் கூட்டமைப்பு , தொழிற்சங்கங்கள் சார்பில் 5 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

Exit mobile version