தமிழகத்தில் அமைகிறது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு லண்டன் சென்ற போது அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வினோத் மேத்தா, பார்த்தஸ்ரீ மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் ஆகியோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Exit mobile version