வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினரான முகுல் சோக் ஷியும் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு ஏற்ப லண்டன் போலீசார் கடந்த மாதம் நீரவ் மோடியை கைது செய்தனர். இதனை தொடர்ந்து லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீரவ் மோடி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நீரவ் மோடியை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை மே 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.