மக்களவைக்கான இறுதிகட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு

மக்களவைக்கு இறுதிகட்டமாக 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுப் பெற்றது. சராசரியாக 60.21% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி பீகாரில் 49.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. இமயமலையை ஒட்டியுள்ள இமாசலபிரதேசத்தில் மாலை 6 மணி நேர நிலவரப்படி 66.18% வாக்குகள் பதிவாகியிருந்தன. மத்திய பிரதேசத்தில் 69.38% வாக்குகளும் பஞ்சாப்பில் 58.81% வாக்குகளும் பதிவாகியிருந்தன. உத்திரபிரதேசத்தில் 6 மணி நிலவரப்படி 54.37% ஓட்டுகளும் மேற்கு வங்கத்தில் 73.05% ஓட்டுகளும் பதிவாகியிருந்தன. இதேபோல ஜார்கண்டில் 70.50 % வாக்குகளும் சண்டிகரில் 63.57% பதிவாகியிருந்தன.

Exit mobile version