பிரதமர் மோடியின் தமிழக தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். செல்லும் இடமெங்கிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழகத்திலும் பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 8-ம் தேதிக்கு பதிலாக 12 மற்றும் 13-ம் தேதிகளில் அவர் தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு வரும் 12-ம் தேதி வரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் கோவையிலும், அடுத்த நாள் தேனியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.