3 மாநிலங்களில் மக்களவை தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனித்து எதிர்கொள்ளும்

மக்களவை தேர்தலில் 3 மாநிலங்களில் மட்டும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் கோபால் ராய், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் நடவடிக்கைகள் காரணமாக 3 மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றி நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், பா.ஜ.கவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், ஆம் ஆத்மியின் முடிவு காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பா.ஜ.க. தரப்பில் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version