மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, துணை ராணுவப்படையினர் திருச்சிக்கு வந்தடைந்தனர். திருச்சி மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு போலீஸார் உதவியுடன் வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள துணை ராணுவத்தினர், தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, முதல் கட்டமாக, உதவி ஆணையர் ரமேஷ் சந்த் தலைமையில், 84 ராணுவ வீரர்கள் திருச்சிக்கு ரயிலில் வந்தனர். இன்று காலை மாநகர உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் வாக்குப்பதிவு நடைபெறும் பிராட்டியூர், கருமண்டபம், ஆகிய பகுதிகளை பார்வையிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.