மார்ச் முதல் வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு?

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதத்தில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முடிவு பெற இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் துரிதமாக தயாராகி வருகின்றன.

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகளில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. அடுத்த 100 நாட்களில் 20 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version