மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் எனவும் மக்களவைத் தேர்தல் தேதியுடன், தமிழகத்தின் 21 தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுடன், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version