மக்களவை தேர்தல் அதிமுகவிற்கும்-காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டி

மக்களவை தேர்தல் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டி என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநிலங்களவை உறுப்பினர் ரத்னவேல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தம்பிதுரை, மக்களின் அடிப்படை தேவைகளை மாநில அரசுதான் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டார். வலிமை இல்லாத காங்கிரஸ் கட்சியால் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.மக்களவை தேர்தல் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான போட்டி என்று அவர் கூறினார்.

Exit mobile version